பக்கம்:மலருக்கு மது ஊட்டிய வண்டு.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கே. பி. நீலமணி

55

.ே க. பி. நீலமணி 55

அம்மாவுக்கு எமனாகவே முடியும். ஆனால்-என்றைக்கா வது ஒருநாள் தன் பிள்ளையின் மனம் மாறும்.இன்று இந்த கல்யாணி இல்லாவிட்டாலும், சில காலம் கழித்தேனும், வேறு ஒரு பெண்ணை மணந்து கொள்ள சம்மதிப்பான்ே தனக்கு அவள் மூலம் ஒரு பேரனோ பேத்தியோ பிறக்கும் என்ற நம்பிக்கையைக்கூட நீங்கள் வேரோடு அழித்து விடாதீர்கள். தயவு செய்து உங்களிடம் நான் வேண்டிக் கொள்வதெல்லாம் அது ஒன்றுதான்' என்று அளவுக்கு மீறி உணர்ச்சி வசப்பட்டுப் பேசியதில் அவள் குரல் கரகரத்தது.

காசிராஜன் அதிர்ந்தே போனான். சாந்தாவின் பேச்சில், இந்த மண்ணின் மாண்பைக் கண்டான் அவனது இதயத்தினின்றும் பிரவாகமாகப் பெருக்கத் தோடும் உணர்ச்சிகளுக்கு அவனால் உருவம் கொடுத்து விமரிசிக்க முடியவில்லை. சாந்தா, நீ எனக்கு மனைவி சாந்தா மட்டுமல்ல' என்ற வார்த்தைகளை முடிக்கு முன்பு அவன் விழிகள் கலங்கிவிட்டது. ஆனால் அந்த வார்த்தைகளை மேலே பேச விடாமல், அவள் அவனது வாயைப் பொத்தினாள்.

  • நானும் உங்களை என் கணவராக மட்டும் கான வில்லை' என்று கூறியபடி ஒரு தாய்க்கு உரிய பாசத் துடன் அவள் அவன் தலையை வருடிக்கொண்டிருந்த போது, ஒரு பச்சிளங் குழந்தையைப் போல காசிராஜன் அவள் மார்பில் முகத்தைப் பதித்துக்கொண்டிருந்தான்

விழிகளை மஸ்லின் துணியால் மறைப்பதுபோல், கண்ணிர் பார்வைக்குத் திரைபோட்டுத் தடுத்துக்கொண் டிருந்தது. விடிவிளக்கின் அந்த மங்கிய நீல ஒளியில் முழுமதியைப் போலப் பிரகாசித்துக்கொண்டிருந்த சாந்தாவின் முகம் , அதில் படிந்திருக்கும் அன்பு, பாசம்மகத்தான தியாகத்தின் ஒளி-அவன் கண்களைக் கூசச்

செய்தன.

- கலைமகள்