பக்கம்:மலருக்கு மது ஊட்டிய வண்டு.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

மலருக்கு மது ஊட்டிய வண்டு

அம்மா காத்திரு

க்கிறாள்

нин нны тннинг

பங்குனி மாதத்துப் படை படைக்கிற வெய்யலில் கஞ்சனுார் கப்பி ரஸ்தாவில், கானல் நீர் தவழ்ந்து விளை

யாடிக் கொண்டிருந்தது.

பால தண்டாயுதபாணி ஸ்டோர் அதிபர் சம்மந்தம் பிள்ளை தன்னுடைய கனடப்பூட்டை மூன்றாவது முறை யாக இழுத்துப் பார்த்தார். பிறகு திருப்தியடைந்த முகத் துடன் அருகில் பல்யமாக நின்று கொண்டிருந்த கடைச் சிப்பந்திகளைப் பார்த்துத் தலையை அசைத்தார். அவர்கள் விடைபெற்றுச் சென்றனர். கடைச் சாவியை இடையில் சொருகிக் கொண்டு, குடையை விரித்துப் பிடித்த வண்ணம் அவரும் மத்தியானச் சாப்பாட்டிற்கு நடையைக் கட்டினார்.

வெறிச்சேடிக் கிடந்த சாலையும், அதில் மாய மானைப் போல் தோன்றித் தோன்றி, மறைந்தும் மிதந்தும் சென்று கொண்டிருந்த கானல் காட்சியும், பின்ளைக்குத் தன்னுடைய வாழ்க்கையைக் குத்திக் காட்டு வது போலிருந்தது. அந்த நினைப்பு வந்த போது இதயத்தை யாரோ கசக்கிப் பிழிவது போல் ஒரு உணர்ச்சி மூண்டது. உதடுகள் அவரையும் அறியாமல் கருணாகரா’ என்று உதட்டுனுள்ளேயே ஒலி எழும்பின. தாங்க