பக்கம்:மலருக்கு மது ஊட்டிய வண்டு.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

மலருக்கு மது ஊட்டிய வண்டு

58 மலருக்கு மது ஊட்டிய வண் டு

இப்படித் தனக்குச் சம்பந்தம் இல்லாதவர்களிடம் நேர்மையும் சத்தியமும் வேண்டுமென்று எதிர்பார்ப்பவர், தன் சொந்த மகனிடம் இவற்றை எல்லாம் எதிர்பார்த் தால் அதில் தவறு என்ன?

ஆனால் கருணாகரன்தோற்றுவிட்டான். ஆம்! அவரது பரீட்சைசையில் அவரிடம் அவன் தோற்றுப்போனான்.

அப்பா மற்றவர்களிடம்செய்வதுபோல், பணத்தைப் பருப்பு மூட்டைக்குப் பின்னால் போட்டுவிட்டு', 'எடுக் கிறானா பார்க்கலாம்", என்று வழக்கமாக வேவு பார்க்கிற வரைக்குமெல்லாம், கருணாகரன் காத்திருக்க வில்லை. அப்பாவின் பைக்குள்ளே அவர் இல்லாதபோது

கையை விட்டுவிட்டான். இதனால் பிள்ளை பன விஷயத்தில் இன்னும் அதிகக் கண்ணும் கருத்துமாய் இருக்கத் தலைப்பட்டார் . மறந்தும் மனிபர் லை

சட்டைப் பையோடு ஆணியில் மாட்டுவதில்லை. பைய னைக் கடைக்குவர அனுமதித்தாலும், கல்லாப் பெட்டிப்

பக்கமே அண்ட விடுவதில்லை. கருணாகரன் எடுக் கிறானோ இல்லையோ, எடுத்துவிடுவான்; எடுத்து விட்டால் என்ன செய்வது?’ என்கிற பயம் அவர்

மனத்தில் ஊறிவிட்டது. வரவர கணவருடைய இந்தப்

போக்கைக் கண்டு காமாட்சி மிகவும் மனம் வருந்தினாள். யாருக்காக இத்தனை சொத்தும்?

ஒருநாள் கருணாகரன் நாலணாவைக் கேட்காமல் எடுத்துக் கொண்டு பள்ளிக்கூடம் சென்றுவிட்டான்.

'சின்னப் பையன்தானே; ஏதோ அறியாத்தனம். மேலும் இவ்வளவு சொத்துக்களையும் ஆண்டு அனு: பவிக்கப் போகிறவன் அவன்தானே’ என்று லேசாகக் கண்டித்து விட்டிருக்கலாம். ஆனால் வெறும் வாயை மெல்லுகிற பிள்ளை யா விட்டு விடுபவர்?