பக்கம்:மலருக்கு மது ஊட்டிய வண்டு.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கே. பி. நீலமணி

61

கே. பி. நீலமணி 61

போதும். இந்தத் தடவை நீங்கள் தனியே பம்பாய் போய்

விட்டு; வரும்போது மகனோடு வந்து சேருங்கள் என்று கூறிவிட்டாள்.

அதன்பிறகு இரவு வண்டிக்கே பிள்ளை தனியாகப் பம்பாய் புறப்படுவது முடிவாகிவிட்டது.

மனைவி இல்லாமல் மகனை தேடிப் புறப்படுவது அவருக்குப் புது அனுபவமாக இருந்தது. வழியெல்லாம் தனிமையில் மகனைப் மற்றியே எண்ணிக்கொண்

и9-СфДБ3 тт.

இன்றைக்கெல்லாம் இருந்தால் கருணாகரனுக்கு இருபது வயது இருக்கும் இந்த எட்டு வருஷங்களில் அவன் யுவனாக எப்படி வளர்ந்து மாறியிருப்பானோ! நல்ல நாகரிகம் தெரிந்தவனாகத்தான் இருப்பான். எங்கெல்லாமோ சுற்றித் தானாக உழைத்து, இங்கே வந்து என்ன வேலையில் இருக்கிறானோ. அவ்வளவு பெரிய பட்டணத்தில் அவனை எப்படித்தான் தேடிக் கண்டு பிடிக்கப் போகிறேனோ’’ என்றெல்லாம் விசாரப்பட்டுக் கொண்டே பிள்ளை பம்பாய் வந்து சேர்ந்தார்.

ஸ்டேஷனுக்கு அவரை வரவேற்க தாமோதரன் வந்திருந்தார். புதிதாக வந்திருக்கும் பிள்ளை யிடம், பலநாள் பழகியதுபோல் தாமோதரத்தின் குழந்தைகள் 'மாமா... மாமா...' என்று ஒட்டி உறவு கொண்டாடின.

முக்கியமான விஷயத்தைப்பற்றிப் பேச்சு திரும்பியது. தாமோதரன் கூறினார்:

"ஒரு வாரத்திற்கு முன்பு நானும் என் மனைவியும் 'அரோராவில் ஒரு படம் பார்க்கப் போயிருந்தோம். உயர் வகுப்பு டிக்கட் வாங்குகிற கியூவை எதேச்சையாகக்