பக்கம்:மலருக்கு மது ஊட்டிய வண்டு.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கே. பி. நீலமணி

67

கே. பி. நீலமணி 67

முஷ்டியால் பலக்க ஒரு குத்து விட்டுவிட்டு போலீஸ்... போலீஸ்' என்று உரக்கக் கத்தியபடி ஒட்டம் பிடித்தார்.

பிள்ளையினுடைய இந்தியத் திடீர் தாக்குதலைச் சற்றும் எதிர் பாராத எதிரி - மூக்கின் வலி தாங்கமாட் டாமல் கத்தியபடி இரையை நழுவ விட்ட விலங்கைப் போல-ஆவேசத்தோடு அவரைத் துரத்திக்கொண்டு ஒடினான். அந்தப் பிராந்தியம் முழுவதும் எதிரொலிக்க அலறிய பிள்ளையின் அபாயக் குரலைக் கேட்டோ என் னமோ, எங்கோ தொலைவில் இரண்டு போலீஸ் ஊதல்

கேட்டது.

பிள்ளையும் திருடனும் ஒரு திருப்பத்தில் கட்டிப் புரண்டு கொண்டிருக்கும் போது திடீரென்று ஒளி வெள் ளத்தைப் பாய்ச்சிய வண்ணம் போலீஸ் லாரி ஒன்று அவர்கள் எதிரில் வந்து நின்றது. அதிலிருந்து குதித்த இரு ஜவான்களிடம் பிள்ளை லபக் கென்று கேடியைப் பிடித்துக் கொடுத்து விட்டார்.

போலீசார் கேடியை வானில் தள்ளிவிட்டுத் திரும்பு

வதற்குள். பிள்ளை அங்கிருந்து நைஸாக நழுவி ஓட்டம் பிடிக்கப் பார்த்தார்.

-ஆமாம். காரியம் முடிந்து விட்டது. இனி நமக் கேன் வம்பும் தும்பும்? மகனைத் தேடி வந்த இடத்தில், சாட்சி, சம்மன் கோர்ட்டு என்று வேறு அலைய வேண் டுமா ? ஏதோ இந்தக் கண்டத்திலிருந்து தப்பினோமே, அதுவே போதும்’ என்பதுதான் பிள்ளையின் எண்ணம். ஆனால் போலீஸ் விட்டு விடுமா ?

"எங்கே போறிங்க சார், நீங்களும் ஏறுங்க வண்டி யிலே’’-என்றார் ஒரு ஜவான்.

நான் எதுக்கப்பா அங்கேயெல்லாம் வரணும். அது தான் கேடியைப் பிடிச்சுக் கொடுத்திட்டேனே. எனக்கு