பக்கம்:மலருக்கு மது ஊட்டிய வண்டு.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

மலருக்கு மது ஊட்டிய வண்டு

68 மலருக்கு மது ஊட்டிய வண்டு

ஒன்றும் நஷ்டமில்லே. என்னை விட்டு விடுங்க, நான் ஊருக்குப் புதிசு’’ என்று கெஞ்சினார் பிள்ளை.

'அதெல்லாம் முடியாது. ஸ்டேஷனுக்கு வந்து ஸ்டேட்மெண்ட் கொடுத்திட்டுப் போயிடுங்க’’ என்று அவரையும் பிடிவாதமாக ஏற்றிக்கொண்டு, வான்

கிங்ஸ்வே"யை நோக்கிப் பறந்தது.

அது ஒரு சிறிய போலீஸ் நிலையம். கே டியை லாக் அப்பில் அடைத்தார்கள். யாரையோ அழைத்து வரவோ எதற்காகவோ வான் மீண்டும் புறப்பட்டுச் சென்றது.

கேடியைப் பூட்டி வைத்திருக்கும் அறைக்குப் பக்கத்தில் உள்ள ஒரு பெஞ்சியில் பிள்ளை தன் தலை விதியை நினைத்து உட்கார்ந்து கொண்டிருந்தார் . தாமோதரன் தன்னைக் காணாமல் என்ன கவலைப் பட்டுக் கொண்டிருக்கிறானோ என அவர் மனம் தவித்தது. அவரைத் தவிர அந்த அறையில் யாருமில்லை . இருந்த மேஜையும், பெஞ்சும் நாற்காலிகளும் காலியாக இருந்தன.

வான் புறப்படுவதற்கு முன்பு எதற்கோ அவர்கள் தன்னை சரியான அதிர்ஷ்டசாலி” என்று கூறிக் கைக் குலுக்கிவிட்டுச் சென்றதையும், வாசலில் பீடி பற்றவைத்த வண்ணம், இரு ஜவான்கள், 'கிழவனுக்கு அடிச்ச யோகத் தைப் பார்த்தியா?’ என்று பேசிக் கொள்வதையும் கேட்டு ஒன்றும் புரியாமல் ஒரேயடியாகக் குழம்பிக் கிடந்தார் பிள்ளை. அப்போது தான் ஒர் ஆச்சரியம் நிகழ்ந்தது.

"இங்கே கொஞ்சம் வாருங்களேன்’ என்று தணிந்த குரலில் யாரோ அழைப்பது கேட்டு பிள்ளை அதிர்ந்து போய்த் திரும்பிப் பார்த்தார்.

-லாக் அப்பில் அடைக்கப்பட்டிருந்த கேடிதான் அவரை அப்படிக் கூப்பிட்டு, அருகில் வரும்படிச் சைகை