பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'வீடு கட்டுவோம்' என்ற பாட்டு, இக்காலத்து வீடுகளை எள்ளி நகையாடுவதாக அமைந்துள்ளது. கதவு வேண்டாம், சன்னல் வேண்டாம் கம்பி வேண்டாம் தம்பி - உள்ளே கள்வர் எவரும் நுழைய மாட்டார் கவலை வேண்டாம் தம்பி. சாவி வேண்டாம், பூட்டும் வேண்டாம் தாழும் வேண்டாம் தம்பி நம் சர்க்கா ருக்கு வீட்டு வரியும் தரவே வேண்டாம் தம்பி. - குழந்தைகள், நாம் கட்டும் வீடுகளைப் பற்றி எண்ணும் எண்ணம் நன்றாகவே இருக்கிறது. ஆனால், குழந்தைகளால் கற்பனை உலகத்தில் நெடுநேரம் வாழ முடியும். நம்மால் முடியுமா? . கீழே விழுந்த இறகு ஒன்றைச் சிறுவன் ஒருவன் குழந்தை மனத்தோடு பார்க்கிறான். அதன் அழகை வியந்து போற்றுகிறான். அதற்கு உரிமை உடைய பறவையைத் தேடுகிறான். இப்படி அமைந்தது இறகு என்னும் பாட்டு. ஆமை முதுகு ஒடு, வீடாகக் காட்சி தருகிறது 'அதிசய வீடு என்னும் பாடலில் மின்மினி கறுத்த வானத்தில் சின்னஞ் சிறு விளக்காகத் தோன்றுகிறது. இவ்வாறு 'நிலா, பிறைச் சந்திரன், தும்பி முதலியவை பற்றிய பாடல்கள் கற்பனைச் சுவையோடு உள்ளன. . - - . . . சிறுவர், குழந்தையுள்ளத்து உணர்ச்சிகளின் தொடர்பு வைத்துக் கொண்டே வளர்ந்த பெரியவர்களின் உலகத்தையும் காண்பவர். ஆகையால், நடன அரங்கத்தில் ஆடும் நாட்டியக் காரியைப் பார்த்த கண்களோடு மயிலின் நடனத்தையும் பார்க், கும் சிறுவர்க்குச் சில வேறுபாடுகள் நன்றாகத் தெரிகின்றன. - 7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/10&oldid=859868" இலிருந்து மீள்விக்கப்பட்டது