பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வித்தைக் காரன் - நல்ல வித்தைக் காரன் - ஜோராய் வேடிக்கை காட்டிவரும் வித்தைக் காரன். சத்தம் போட்டே அழைத்திடுவான். தமுக்கை ஓங்கி அடித்திடுவான். எத்த னையோ வித்தைகளை எங்க ளுக்குக் காட்டிடுவான்! (வித்தைக்காரன்) கம்பம் ஒன்றில் ஏறிநிற்பான்; கரகம் ஒன்றைத் தலையில்வைப்பான்; பம்ப ரம்போல், சுழன்றே.ஆடிப் பார்த்த பேரைத் திகைக்கவைப்பான்! (வித்தைக்காரன்) கொட்டை ஒன்றைத் தரையில்வைப்பான்; கூடை போட்டு மூடிவைப்பான். எட்டு நிமிஷம் ஆகுமுன்னே எடுத்துப் பார்த்தால் மாஞ்செடியாம்! (வித்தைக்காரன்) 101

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/104&oldid=859877" இலிருந்து மீள்விக்கப்பட்டது