பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நட்டுவனார் இல்லாமலே ஆடும் மயில் இது. பயிற்சி ஏதும் இல்லாமலே ஆடும் மயில் இது பின் பாட்டு யாரும் பாடிடாமல் ஆடும் மயில் இது. காலில் ஏதும் சலங்கையின்றி ஆடும் மயில் இது இரு கண்ணில் மையும் தீட்டிடாமல் ஆடும் மயில் இது. சிறுவர்க்கு அறிவூட்டும் பாடல்களாகவும் இதில் சில அமைந்துள்ளன. பார்த்துப்போ தம்பி', 'எங்கள் பள்ளி, 'முப்பெரும் புலவர், ஒளவைப் பாட்டி', 'பலன்', 'காந்தி வழி' முதலான பாடல்கள் அப்படிப்பட்டவை. - கதைப்பாடல்கள் என்ற பகுதியும் அவ்வாறு பயன்படும் பாடல்களைக் கொண்டதே ஆகும். அப்பாடல்கள், பல நல்ல உண்மைகளையும் நீதிகளையும் சிறுவர்க்கு உணர்த்துவன ஆகும். - வேடிக்கைப் பாடல்கள் என்ற பகுதியில், வினோத விடைகள், இருபது பேர்கள் என்பவை மிக்க மகிழ்ச்சி தருவன. இவ்வாறு நல்ல கற்பனையும், சிறந்த உணர்ச்சிகளும், உயர்ந்த நோக்கங்களும் குழந்தைகளின் மனத்தில் பதியுமாறு பல பாடல்களைப் பாடித் தொகுத்துத் தந்துள்ளார் குழந்தைக் கவிஞர் திரு. அழ. வள்ளியப்பா. அவருடைய தொண்டுக்குத் தமிழ்நாடு என்றும் நல்ல வரவேற்பும், பாராட்டும் தரும் என்பது உறுதி. வாழ்க அவர்தம் குழந்தை இலக்கியங்கள்! - - மு. வரதராசன் 8 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/11&oldid=859888" இலிருந்து மீள்விக்கப்பட்டது