பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நறுக்கி எறிந்த நகத்தைப் போல இருக்கும் நிலாவே - நீ நகர்ந்து நகர்ந்து போவ தெங்கே? சொல்லு நிலாவே. ஒடம் போல வானில் ஊர்ந்து செல்லும் நிலாவே - நான் உன்மேல் ஏறிக் கொள்ள லாமோ? சொல்லு நிலாவே. கொம்பைப் போலக் கூர்மை யாக இருக்கும் நிலாவே - என்னைக் குத்திக் கீழே தள்ளு வாயோ? சொல்லு நிலாவே. வில்லைப் போல வளைந்தி ருக்கும் வெள்ளை நிலாவே - நீ வேட்டை யாட உதவு வாயோ? சொல்லு நிலாவே. 115

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/119&oldid=859908" இலிருந்து மீள்விக்கப்பட்டது