பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்று ஞாயிற்றுக்கிழமை. எங்கள் வீட்டின் எதிரேயுள்ள மாமரத்தடியில் குழந்தைகள் கூடிப் பேசி விளையாடிக் கொண்டிருந்தார் கள். அப்படி அடிக்கடி அங்கே அவர்கள் கூடுவது வழக்கம். அந்தக் குழந்தைகள் கூட்டத்தில் ஒரு சிறுவன் புத்தாடை அணிந்திருந்தான். அவனைப் பார்த்து இன்னொரு சிறுவன், “இன்றைக்கு என்னடா புதுக் கால்சட்டை, புது மேல்சட்டை எல்லாம் போட்டிருக் கிறாய்?" என்று கேட்டான். - "இன்று என் பிறந்த நாள். அதனால்தான்". என்றான், புத்தாடை அணிந்திருந்த சிறுவன். - - "அப்படியானால், நீ ஞாயிற்றுக்கிழமை பிறந்தவன்” என்றாள் ஒரு சிறுமி. - - . . . " அவர்களது உரையாடலைக் கவனித்துக் கொண்டிருந்த நான், "இவன் ஞாயிற்றுக்கிழமை பிறந்த பிள்ளை. ஞாயிற்றுக்கிழமை பிறந்த பிள்ளை எப்படி இருக்கும், தெரியுமா?” என்று விளையாட்டாகக் கேட்டேன். - "எப்படி யிருக்கும்?" என்று பலரும் சேர்த்து ஒரே குரலில் கேட்டனர். “ஞாயிற்றுக் கிழமை பிறந்தபிள்ளை நன்றாய்ப் பாடம் படித்திடுமாம்” என்றேன். உடனே ஒரு சிறுமி, "அப்படியானால், திங்கட்கிழமை பிறந்த

  • 33

r பிள்ளை...?” என்று கேள்வி போட்டாள். சற்றுத் தயங்கினேன். பிறகு, "திங்கட் கிழமை பிறந்தபிள்ளை தினமும் உண்மை பேசிடுமாம்” என்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/12&oldid=859910" இலிருந்து மீள்விக்கப்பட்டது