பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர் மாலை வேளையில் தினமும் அங்கே வருவதேன்? அருணன் கூறும் கதைகளை ஆவ லோடு கேட்கவே. கரடி, சிங்கம், நரியெலாம் கதையில் பேசச் செய்குவார். சிறுவர் வயிறு குலுங்கவே சிரிக்க வைத்து மகிழுவார். வீரர் கதைகள் சொல்லுவார். வியப்புக் கதைகள் கூறுவார். தீரச் செயல்கள் புரிந்திடும் சிறுவர் கதைகள் சொல்லுவார். கண்ணன் கதைகள் கூறுவார். காந்தி கதையும் சொல்லுவார். இன்னும் கதைகள் ஆயிரம் இனிக்க இனிக்கக் கூறுவார். சிறுவர் மகிழ வேண்டியே தினமும் கதைகள் கூறிடும் அருமை யான அண்ணனாம் அருணன் வாழ்க, வாழ்கவே! 120

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/124&oldid=859920" இலிருந்து மீள்விக்கப்பட்டது