பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o 爵 Z ଜy \ - தைதை என்றே ஆடு கின்றாள் தங்கை மீனா ஜோராய் - என் தங்கை மீனா ஜோராய் - அவள் கையைக் காலை ஆட்டு கின்ற காட்சி தன்னைப் பாராய் - அந்தக் காட்சி தன்னைப் பாராய். கையில் புல்லாங் குழலெ டுத்துக் கண்ணன் போல வருவாள் - மாயக் கண்ணன் போல வருவாள். மையைக் கண்ணில் தீட்டிக்கொண்டு மானைப் போலப் பார்ப்பாள் - புள்ளி மானைப் போலப் பார்ப்பாள். தில்லைநட ராஜ ரைப்போல் திருந டனம் புரிவாள் - இங்கே திருந டனம் புரிவாள். எல்லை யில்லா மகிழ்வுடனே எவரும் பார்க்கச் செய்வாள் - நன்றாய் எவரும் பார்க்கச் செய்வாள். 123

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/127&oldid=859927" இலிருந்து மீள்விக்கப்பட்டது