பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாத்தா எங்கள் தாத்தா - மிகத் தங்க மான தாத்தா. பார்த்தால் அருகில் அழைப்பார் - என்னைப் பாசத் தோடே அணைப்பார். படிப்புச் சொல்லித் தருவார் - நல்ல பழக்கம் கற்றுத் தருவார். சிடுசி டுக்க மாட்டார் - என்றும் சிரித்துக் கொண்டே இருப்பார். அறுப துவய தாச்சு - ஆனால், அவரைத் தொடர்ந்து நடக்க ஒருவரும் இல்லை இங்கே! - இது உண்மை, உண்மை, உண்மை! மூன்று பத்து, இரண்டு - பற்கள் முழுதும் அவர்க்கே உண்டு. ஊன்று கோலே வேண்டாம் - அவர் ஒடி யாடித் திரிவார். 125

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/129&oldid=859930" இலிருந்து மீள்விக்கப்பட்டது