பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடனே, "நான் திங்கட்கிழமைதான் பிறந்தேன்", "நான்கூடத் திங்கட்கிழமைதான் பிறந்தேன்” என்று மூன்று, நான்கு குழந்தைகள் கூறினார்கள். "சரி, செவ்வாய்க் கிழமை பிறந்த பிள்ளை என்ன செய்யும்?" என்று வேறொரு குழந்தை கேட்டது. ஒவ்வொரு கிழமையில் பிறந்த பிள்ளையும் எப்படி இருக்குமென நான் கூறிக்கொண்டே வந்தேன். - சனிக்கிழமை வரை நான் கூறி முடித்ததும், குழந்தைகள் ஒருவரைப் பார்த்து ஒருவர், "நீ எந்தக் கிழமையில் பிறந்தாய்?", "நீ எந்தக் கிழமையில் பிறந்தாய்? "என்று கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். ஒரு குழந்தை, "வெள்ளிக்கிழமை பிறந்தேன்’ என்று சொன்னால், உடனே, "அண்ணா, அவன் வெள்ளிக்கிழமை பிறந்தானாம். அப்படியானால், வேண்டும் உதவிகள் செய்திடுவான். இல்லையா, அண்ணா?” என்று கேட்டார்கள். புதன்கிழமை", என்றால், "அப்படியானால், பெற்றோர் சொற்படி நடப்பான் இவன்” என்றார்கள். இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த நான், "இப்போது உங்கள் ஒவ்வொருவரையும் நான் கேள்வி கேட்கப் போகிறேன். எங்கே, பதில் சொல்லுங்கள். பார்க்கலாம்” என்றேன். குழந்தைகள் கேள்வியை ஆவலாய் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். "நான் ஏழு கிழமைகள் சொன்னேனல்லவா? இந்தக் கிழமைகள் ஏழுக்குள் எந்தக் கிழமையில் நீ பிறந்தாய்?” என்று ஒரு சிறுவனைக் கேட்டேன். "செவ்வாய்க் கிழமை நான்பிறந்தேன் செய்வதை ஒழுங்காய்ச் செய்திடுவேன்” என்று, நான் சொன்ன முறையிலே எனக்குப் பதிலளித்தான் அந்தச் சிறுவன்! இப்படியே மற்றக் குழந்தைகளும் மகிழ்ச்சியோடு பதில் தந்தனர். அவர்களைக் காட்டிலும் எனக்குத் தான் பன்மடங்கு மகிழ்ச்சி. காரணம், எனக்கு அவர்கள் மூலம் ஒரு பாட்டுக்கிடைத்து விட்டதல்லவா? இது நடந்து ஒரு வாரங்கூட ஆகவில்லை. ஒரு நாள் என் மகன் என்னிடம் வந்து, "அப்பா, நாலனா வேனும், 10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/13&oldid=859932" இலிருந்து மீள்விக்கப்பட்டது