பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகத்தின் தலைசிறந்த அறிஞர் பலரின் நல்வாழ்த்தும், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், குழந்தைகள் முதலியோரது பேராதரவும் கிடைத்தன. அவர்களது ஆசியும், அன்பும், ஆதரவுமே இந்த இரண்டாம் தொகுதி வெளிவருவதற்குப் பெரிதும் துணைநின்றன. - சிறந்த சிந்தனையாளராகவும், பண்பட்ட எழுத்தாளராகவும் விளங்கும் டாக்டர். மு.வரதராசனார் அவர்களுக்குக் குழந்தை இலக்கியத் தில் அளவற்ற ஆர்வமும் அக்கறையும் உண்டு. இதை அவர்களது எழுத்திலும் பேச்சிலும் எளிதிலே அறியலாம். அவர்கள் இப்புத்தகத்திற்கு அரியதோர் அணிந்துரை நல்கியதோடு, என் முயற்சிகளுக்கு வாழ்த்தும் கூறியிருக்கிறார்கள். இது நான் பெற்ற பெரும் பேறாகும். அவர்களது பேரன்பை எண்ணி எண்ணி மகிழ்கின்றேன். அவர்களுக்கு என் நன்றி கலந்த வனக்கத்தைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். குழந்தைப் புத்தகம் என்றால் அதில் படங்கள் இல்லாதிருக் கலாமா? படங்கள் இல்லாத குழந்தைப் புத்தகம் மலர்கள் இல்லாத நந்தவனம் போன்றதே. இப்புத்தகம் கவர்ச்சியாய் அமைவதற்குச் சிறந்த முறையில் ஒவியங்கள் வரைந்தவர், தமிழ் நாட்டின் முன்னணி ஒவியர்களில் ஒருவராகிய திரு. ஸாகர் அவர்கள். பாடல்கள் முடியும் இடங்களில் உள்ள சிறுசிறு படங்களை வரைந்தவர், கேலிப் படங்கள் வரைவதில் வல்லவரான திரு. ரானு அவர்கள். . கல்விச் செல்வம், கேள்விச் செல்வம், பொருட் செல்வம் முதலிய செல்வங்களைக் காட்டிலும் நிறைந்த ஒரு செல்வம் எனக்கு உண்டு. அதுதான் நட்புச் செல்வம். என் இலக்கிய முயற்சிகளுக்கெல்லாம் துணை நின்று, அடிக்கடி எனக்கு உற்சாகமூட்டி, ஊக்கமளித்து வரும் நண்பர்கள் பலர். அவர்களின் நன்முயற்சியால்தான் இப்புத்தகம் வெளிவருகிறது. - . கவிமணியவர்களிடம் பல சிறப்பியல்புகள் உண்டு. அவற்றுள் ஒன்று என் உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்தது. அவர்கள் எதை எழுதினாலும் அதைத் தம் நண்பர்களிடம் காட்டி அவர்கள் நன்றாயிருக் கிறது என்று சொன்னால்தான், அச்சுக்கு அனுப்புவார்கள். இப்படி யிருந்தால் நன்றாயிருக்குமே என்று ஒருவர் ஒரு மாற்றம் சொன்னால், இதை அவர்கள் ஆர்வமுடன் கேட்பார்கள். அந்த யோசனை நல்லதா யிருப்பின், தக்க மாற்றம் செய்யச் சற்றும் தயங்கமாட்டார்கள். கவிமணி யவர்களின் இத்தகைய தன்னடக்கத்தைக் கண்டு நான் பெரிதும் 12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/15&oldid=859969" இலிருந்து மீள்விக்கப்பட்டது