பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"கோபக்காரன் என்றே ஊரிலுள்ளோர்-என்னைக் கூறிடு வாரன்றோ? ஆதலினால், கோபத்தைக் காசியில் விட்டுவந்தேன்” - என்றே கூறினர் மறுமொழி தாத்தாவுமே. கண்ணனும் உடனேயே, "தாத்தா, தாத்தா நீயும் ாசியில் விட்டதும் என்ன?" என்றான். "இந்நேரம் கோபத்தை விட்டதாய்ச் சொன்னேனே. #a t மா?” என்றுரைத்தார். மீண்டும் ஒருமுறை கேட் திரும்பவும்,"கோபத்தை விட்டே”னென்றே தாத்தா செப்பினர். முரளியும், "ஒகோ” என்றான். அருணனும் கோபுவும் அழகப்பனும் - இன்னும் அலமுவும் கீதா காவேரியுமே திரும்பத் திரும்பஇக் கேள்விதனைக் - கேட்கச் சீறி எழுந்தனர் தாத்தாவுமே! “வேலையற்ற வெட்டிப் பிள்ளைகளா என்ன வேடிக்கையா இங்கே காட்டுகிறீர்? தோலை உரித்தே எடுத்திடுவேன்” - என்று சொல்லியே கையில் தடிஎடுத்தார். 173

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/178&oldid=860009" இலிருந்து மீள்விக்கப்பட்டது