பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுருக்குப் போட்டுக் கயிற்றி னாலே கொடுக்கில் கட்டினர்; தூக்கிச் சுவரில் தேளைக் கட்டித் தொங்க விட்டனர்; அருகில் நின்று சிரித்த படியே அதனைப் பார்த்தனர். அந்தப் பார்வைக் குள்ளே யுள்ள அர்த்தம் என்னவோ? தொங்கு கின்ற தேளைக் கண்டே அங்கு வந்திடும் சொந்தக் காரத் தேள்கள் ஓடி ஒளியு மென்றுதான் அங்கு ஜவஹர் தேளைக் கட்டித் தொங்க விட்டனர். ஆனால், அதுவும் எந்த விதமோ தப்பி விட்டதாம்! அங்கும் மிங்கும் ஜவஹர் தேளைத் தேடிப் பார்த்தனர். அறையில் அதனைக் கண்டு பிடிக்க முடிய வில்லையாம். 189

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/194&oldid=860027" இலிருந்து மீள்விக்கப்பட்டது