பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"ஐயோ, குளிர்மிக வீசுவதால் - இந்த ஆண்மயில் மேனி நடுங்குதம்மா 'ஐயா, உதவுங்கள் என்கிறதோ - மயில்? ஆமாம், அதைத்தான் உரைக்கிறது.” எண்ணினன் இப்படி மன்னனுமே - உடன் எடுத்தனன் போர்த்திய போர்வையினை. சென்றனன் அந்த மயிலருகே - உள்ளம் திருப்தி அடைந்திடப் போர்த்தினனே. உடலும் மழையால் குளிர்ந்திடவே - அவன் உள்ளம் கொடையால் குளிர்ந்ததுவே. கொடையில் சிறந்தோன் பெயர்சொல்லவா? - மக்கள் கொண்டாடும் பேகன் அவனல்லவா! பேகன் கடையேழு வள்ளல்களில் ஒருவர். பழனி மலையையும் அதையடுத்த ஊர்களையும் ஆண்டு வந்தவர். 202

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/207&oldid=860041" இலிருந்து மீள்விக்கப்பட்டது