பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறப்புப் பட்டங்கள் : பிள்ளைக் கவியரசு குழந்தைக் கவிஞர் என அன்போடு அழைக்கப்பெறும் இவரது பொன் விழாவையொட்டி பாரதி இளைஞர் சங்கச் சார்பில் 1972-ல் 'பிள்ளைக் கவியரசு என்ற சிறப்புப் பட்டம் பொறித்த கேடயத்தை நீதிபதி கிருஷ்ணசாமி ரெட்டியார் அவர்கள் வழங்கினார். மழலைக் கவிச் செம்மல் : 1979 ல் சர்வதேசக் குழந்தைகள் ஆண்டு விழாக் குழு (காரைக்குடி இவரது குழந்தை இலக்கியத் தொண்டினைப் பாராட்டிக் கேடயம் வழங்கியது. தவத்திரு குன்றக்குடி அடிகளார் பொன்னாடை போர்த்த, கவியரசு முடியரசனார் மழலைக் கவிச் செம்மல் எனும் பட்டத்தை வழங்கினார். தமிழ்ப் பேரவைச் செம்மல் : வாழ்நாள் முழுவதும் குழந்தை இலக்கிய வளர்ச்சி ஒன்றையே குறிக்கோளாய்க் கொண்டு பல நூல்கள் படைத்தும், பல வழிகளில் தொண்டாற்றியும் வருகின்ற முன்னோடி என மதுரை காமராசர் பல்கலைக் கழகம் 9:1-82ல் சிறப்பாக ஒருவிழா எடுத்துப் பாராட்டியது. தமிழப் பேரவைச் செம்மல் எனும் பட்டத்தையும் ரூ. 5000/- மதிப்புள்ள பொற்பதக்கத்தையும் வழங்கியதோடு, பொன்னாடை போர்த்தியும் சிறப்பித்தது. குழந்தை இலக்கியப் பணிக்கு வெள்ளி விழா : இவர் 25 ஆண்டுகளாக ஆற்றிவரும் குழந்தை இலக்கியப் பணியைப் பாராட்ட வள்ளல் திரு. ஏ. வி. மெய்யப்பன் அவர்கள் தலைமையில் அமைக்கப் பெற்ற குழு, வெள்ளி விழாவை 22-11-70 ல் மிகச் சிறப்பாகக் கொண்டாடியது. சென்னைப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் திரு. நெ. து. சுந்தர வடிவேலு அவர்கள் தலைமையில் பல அரிய கட்டுரைகள் அடங்கிய மலரை, சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி மா. அனந்தநாராயணன் அவர்கள் வெளியிட்டார். திரு. கொத்தமங்கலம் சுப்பு தலைமையில் இவரைப் பற்றி 25 கவிஞர்கள் பாடி அரங்கேற்றிய கவிதைகளை, பாரதி பாலர் கலையரங்கம் வெளியிட்டது. பாரதியார், கவிமணி, வள்ளியப்பா ஆகியோரின் வாழ்க்கை வரலாறு அடங்கிய சிறுவருக்கு - கவிதை தந்தவர் கதை' என்று புலவர் திரு. அ. அப்துல் கரீம் எழுதிய நூலை, நாமக்கல் கவிஞர் வெளியிட்டார். (இந்நூல் பின்னர் தமிழக அரசின் பரிசு பெற்றது). பொன் விழா : 1972 ல் வானொலிச் சிறுவர் சங்கப் பேரவைத் தலைவர் புலவர் தணிகை உலகநாதன் அவர்கள் தலைமையில் பல 227

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/233&oldid=860070" இலிருந்து மீள்விக்கப்பட்டது