பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர் சங்கங்கள் சேர்ந்து மாணவர் மன்றத்தில் நடத்திய விழாவில், கலைக் களஞ்கியத் தலைமைப் பதிப்பாசிரியர் திரு துரன் அவர்கள் பொன்னாடை போர்த்தினார். வள்ளியப்பா பாட்டு'ப் போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு வெள்ளிப் பதக்கங்களும், புத்தகங்களும் பரிசுகளாக வழங்கப் பெற்றன. மணிவிழா : இவரது மணிவிழாவைப் பல ஊர்களில், பல சங்கங்கள் நடத்தினர். காரைக்குடியில் அமைக்கப் பெற்ற மணிவிழாக் குழுவினர், 60 கவிஞர்கள் குழந்தைகளுக்காக எழுதி, கவிஞர் செல்ல கணபதி, ரா. பொன்ராசன் இருவரும் தொகுத்து பழனியப்பா பிரதர்ஸ் தயாரித்த அன்புக் குழந்தைக்கு அறுபது பாடல்கள் என்ற நூலை வெளியிட்டதோடு, குழந்தைகளின் சிறப்புக் கலை நிகழ்ச்சியைக் கம்பன் மணிமண்டபத்தில் நடத்தி, கவிஞரின் ஏடு தூக்கிப் பள்ளியில்..' என்று தொடங்கும் பாடல் அடங்கிய செப்பேட்டினை 300 பள்ளிகளுக்கு வழங்கினர். கவிஞர் பிறந்த இராயவரத்தில் உள்ள அருள்மிகு முத்துமாரி அம்மன் திருக்கோயிலில் கவிஞர் எழுதிய துதிப்பாடல் அடங்கிய கல்வெட்டினையும் திறந்து வைக்க ஏற்பாடு செய்தனர். மொழி பெயர்ப்பு : 'நம் நதிகள் என்னும் தென்னாட்டு ஆறுகள் பற்றிய இவரது நூலை தேசிய மொழிப் புத்தக டிரஸ்ட் 14 இந்திய மொழிகளில் வெளியிட்டுள்ளது. தெலுங்கில் இவரது பாடல் தொகுப்பு ஒன்றும், பல பாடல்கள் ஆங்கிலத்திலும், சில நூல்கள் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய தென்மொழிகளிலும் வெளிவந்துள்ளன. பாடநூல்கள், வானொலி, தொலைக்காட்சி :1000க்கு மேற்பட்ட குழந்தைப் பாடல்கள் இயற்றியிருக்கிறார். தமிழ் நாட்டுப் பாடநூல்களில் மட்டுமன்றி, கேரளம், கர்நாடகம், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், மொரீஷியஸ் போன்ற நாடுகளில் வெளியான நூல்களிலும், இவரது பாடல்கள் இடம் பெற்றுள்ளன. சென்ன்ை, இலங்கை, சிங்கப்பூர் வானொலிகளிலும், சென்னை தொலைக் காட்சியிலும் இவரது பாடல்களும், நாடகங்களும் இடம் பெறுகின்றன. வகித்த பதவிகள் : மதுரை காமராசர் பல்கலைக் கழகக் கல்விக் குழுவில் (Academic Council) ஆயுள் உறுப்பினராக, பல்கலைக் கழக வேந்தர் (தமிழ்நாடு கவர்னர்) நியமித்தார். தலைவர், குழந்தை எழுத்தாளர் சங்கம், சென்னை தலைவர், குழந்தை இலக்கியச் சங்கம், காரைக்குடி, உறுப்பினர், சென்னை தொலைக்காட்சி நிலைய ஆலோசனைக் குழு, 228

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/234&oldid=860071" இலிருந்து மீள்விக்கப்பட்டது