பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துள்ளித் துள்ளி ஓடுதுபார் வெள்ளை முயல் அம்மா - அதை மெள்ள ஒடிப் பிடித்திடவே மிகவும் ஆசை அம்மா. பஞ்சு போன்ற உடலைத் தடவிப் பார்க்க ஆசை அம்மா - நான் கொஞ்சிப் பேசிக் கூடி ஆடிக் குதிக்க வேண்டும் அம்மா. பளிங்குக் கண்ணைக் கூர்ந்து நானும் பார்க்க ஆசை அம்மா - அது ஒளிந்து கொள்ளப் புதரை நோக்கி ஒடப் பார்க்கு தம்மா. புல்லைத் தினமும் பிடுங்கிப் பிடுங்கிப் போடு வேனே அம்மா - அது மெல்ல மெல்லக் கடித்துக் கடித்து உள்ளே தள்ளும் அம்மா 65

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/69&oldid=860126" இலிருந்து மீள்விக்கப்பட்டது