பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணன் தம்பி அண்ணன் தம்பி அண்ணன் தம்பி - காற்றை எந்த இடத்திலேனும் கண்ட துண்டோ தம்பிநீ? காற்றை இந்தக் கண்களாலே கண்ட தில்லை இதுவரை. காற்றை யாரும் கண்டதாகக் காதில் கேட்ட துண்டோநீ? காற்றை எவரும் கண்டதாகக் காதில் விழவும் இல்லையே! காற்று உண்டு உலகில் என்று கண்டு கொள்வ தெப்படி? கண்டு பிடிக்க வழிகள் உண்டோ? கற்றுத் தருவாய் அண்ணனே. {❍ C (} C}(x Go Go அண்ணன் பட்டம் மேலே செல்வதைப் பார். பச்சை இலைகள் அசைவதைப் பார். கடலில் அலைகள் எழுவதைப் பார். காகி தங்கள் பறப்பதைப் பார். 67

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/71&oldid=860129" இலிருந்து மீள்விக்கப்பட்டது