பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குதிரை போல நீயுமே குனிந்து கொள்வாய், நானுமே முதுகில் ஏறிக் கொள்ளுவேன். முன்னே ஒடிச் செல்லுவாய். நொண்டிக் குதிரை போவே நின்று நின்றே போகிறாய். சண்டித் தனமா செய்கிறாய்? சாட்டை அடியா கேட்கிறாய்? பின்னால் ஏனோ செல்கிறாய்? பிடித்துத் தள்ளும் எண்ணமோ? என்னைக் கீழே வீழ்த்தவா இந்த வேலை செய்கிறாய்? கொள்ளு நிறைய வேணுமா? புல்லும் சேர்த்துத் தருகிறேன். நல்ல ஜாதிக் குதிரை போல் துள்ளிக் குதித்துச் செல்லுவாய்! 82

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/87&oldid=860146" இலிருந்து மீள்விக்கப்பட்டது