பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எண்ணெய் ஊற்ற வில்லை - யாரும் ஏற்றி வைக்க வில்லை. சின்னஞ் சிறிய விளக்கு - பெயர் தெரியு மோதான் உனக்கு? இருந்த இடத்தில் இல்லை - அது இங்கு மங்கும் போகும். பறந்து செல்லும் விளக்கு - அதைப் பார்த்த துண்டோ? சொல்வாய். கறுத்த வானம் தன்னில் - நன்கு கண்சி மிட்டும் மீன்போல் இருட்டில் ஒளியைக் காட்டும் - அதை என்ன வென்று சொல்வாய்? too Coo coco கண்ணைக் கவரும் அதனை - நான் கண்டு பிடித்து விட்டேன். மின்மி னிதான் அதுவாம் - தம்பி வேறு எதுவும் இல்லை! 96

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/99&oldid=860159" இலிருந்து மீள்விக்கப்பட்டது