பக்கம்:மலரும் மஞ்சமும்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 &

குறிப்பிட்டுள்ளார்' - என்றான் அவன். * என்ன அந்தப் பாடல்?’’ என்று கேட்டாள் அவள். ஒரு திருமணத்தில் மணமக்களை வாழ்த்தும் பொறுப்பு ஒளவையாருக்கு அளிக்கப்பட்டது. ஒளவையார் தமிழகத்தைக் காலாலே அளந்தவர்.

மக்கள் வாழ்க்கையின் அடிப்படைக் கூறுகளை நன்கு உணர்ந்தவர். காதல் வயப்பட்ட மணமக்கள்

கடைசிவரை அவ்வுணர்வு குன்றாமல் வாழ்வதே சிறப்பு என்பதை அவர்களுக்கு உணர்த்த விரும்பினார் அவர்.

ஒரு பெண்ணின் இளமை அவள் மார்பின் எழுச்சியை வைத்தே மதிக்கப் படுகிறது,

அந்த மாரிபையே - காதலுக்கு அளவு கோலாக வைத்துப் பாடுகிறார். அரன்பதி கயிலாய மலை ! இது பெண்ணின் மார்புக்கு உருவகம். ஆயன்பதி ஆலிலை (திருமால் உறங்கிய, ஊழியில் மிதந்த ஆலிலை) இது பெண்ணின் அடிவயிற்றுக்கு உருவ்கம். கன்னிப் பருவத்தில் -