உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மலரும் மஞ்சமும்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99.

கயிலாயமாய் நிமிர்ந்திருக்கும் மார்பு முதுமையில் கட்டுக் குலைந்து நீண்டு தொங்கி அடிவயிற்றில் மோதுகிறது. இந்த முதிய நிலையிலும் - கைப்பிடித்த அன்று ஒருவன் மனைவியை எப்படி ஆர்வத்தோடு காதலித்தானோ அப்படியே காதலிக்க வேண்டும் - என்பது அவர் வாழ்த்துப்பாவின் கருத்து.

ஆயன்பதியில் அரன்பதிவக் துற்றளகம் மாயன்ஊ துங்கருவி யானாலும் - தூயமணிக் குன்றுபோல் வீறு குவிமுலையாள் தன்னுடனீர் இன்றுபோல் என்றும் இரும்.

இதுதான் அப்பாடல்' என்று கூறினான் அவன். குடும்ப வாழ்வின் உயிர் நாடியான கருத்தை இவ்வளவு சுருக்கமாக, அழகாக ஒளவையார் போன்ற பெரியோர்களே திருமண வாழ்த்தாக எடுத்துரைக்க முடியும். இப்பாடலின் நுட்பம் வியக்கத்தக்கது '

என்றாள் அவள், - * பாவேந்தர் குடும்ப விளக்கின் தலைவியும் இதைத்தான் தனது முதிர்ந்த நிலையில் குறிப்பிடுகிறாள். தலைவி தங்கம் புதுமலர் அல்லள் 1,