பக்கம்:மலரும் மஞ்சமும்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



2. மல்ரினும் மெல்லிது காமம்

மாடியின் நிலா முற்றம்! கோடாக அரும்பி, கீற்றாகி, அரிவாளாக வளர்ந்து, ஒடமாகி, இன்று மத்தைப்போல் காட்சியளித்தது முத்து நிலா! அந்த மங்கிய ஒளியில் மல் லாந்து படுத்திருந்த அவன் உள்ளத்தில், சிந்தனைத் தேனிக் கள் இன்பத் தேனடைகளை நிரப்பிக் கொண்டிருந்தன.

எடுத்த அடிதோறும் கலீர் கலீர் என்று இசைப்போதை எழுப்பும் சதங்கை மிஞ்சியின் ஒசை!

அவள் படியேறி வந்துகொண்டிருந்தாள்: மலரினும் மெல்லிது காமம்... அவன் வாய் அந்தச் சொற்களை அசைபோட்டுக் கொண்டிருந்தது.

காமமா! - அந்தச் சொல்லைச் சொல்லும் போதே ஒரு கரப்பான் பூச்சி முகத்தில் ஊர்வது போன்ற அருவருப்பு அவளுக்கு.

ஏன்? காமம் என்ற சொல் காதில் விழுந்ததும் துத்திக் காய் போல முகத்தைச் சுருக்கிக் கொள்கிறாய்? - என் றான் அவன். பின் என்ன? காமுகன்’ என்ற சொல் அத்து மீறும் ஆடவனைத்தானே குறிப்பிடுகிறது?’ என் றாள் அவள்.

'உண்மைதான்! காமம்' என்ற தூய்மையான சொல்லைக் காலப்போக்கில் கேவலப் படுத்தி விட் எரிகள் இலக்கியவாதிகள். தொல்காப்பியரும், கழகப் புலவர்களும் ஐந்திணை வழிபட்ட உயர்வான காதலைக் காமம்’ என்றேகுறிப்பிட்டனர்' - என்று விளக்கினான் அவன்.