பக்கம்:மலரும் மஞ்சமும்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

"இவ்வாறு கேவலப்படுத்தப்பட்ட வேறு சொல் ஏதா வது உண்டா?’ என்று கேட்டாள் அவள்.

'உண்டு. "முலை என்ற சொல். கழகப் புலவர்கள் எந்தவிதக் கூச்ச உணர்வுமின்றி இயல்பாக இச்சொல்லைப் பாடலில் பயன்படுத்தி வந்தனர். ஆனால் காலப்போக்கில் இதுவும் கொச்சைப் படுத்தப்பட்டது - என்றான் அவன். நான் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபோது, புகழ் பெற்ற ஒரு தமிழ்ப் பேராசி ரியர் அந்தச் சொல் வருமிடத்தில் எல்லாம் முகை என்று மாற்றிப் படிப்பார். அச்சொல்லைக் கண்டாலே அவருக்கு நடுக்கம்! உடனே வகுப்பில் ஒரு சலசலப்பு: எல்லா மாணவருடைய கண்களும் எங்கள் பக்கம் கள்ளப்பார்வை பார்க்கும். பேசாமல் அந்தச் சொல்லை இருந்தபடியே படித்திருந்தால் அந்தச் சலசலப்பு ஏற்பட்டிருக்காது என்று நாங்கள் நினைப்போம்!' - என்றாள் அவள்.

“பண்டைப் புலவர்கள் எல்லோரும் காமம் - காதல் என்ற இரண்டு சொற்களையும் எந்தவித வேறுபாடும் இன்றி உயர்ந்த பொருளில் கையாண்டனர். கடவுளுக்குக் கொடுக்காத சிறப்பைக் காமத்துக்குக் கொடுத்துப் போற்றி னர்' என்று கூறினான் அவன். -

"கடவுளை ஏற்றுக்கொள்ளாத நாத்திகர்களும், சில நாத்திக சமயங்களும் உண்டு. காதலை ஏற்றுக் கொள்ளா தார் யார்?' என்று கூறி அவன் கூற்றை உறுதிப்படுத்தி னாள் அந்த ஊற்று நிலா.

"காதல் என்பது ஒவ்வோர் உயிரிடத்திலும் தானாக ஊறிவரும் இயல்பூக்கம் (Instinct). எனவேதான் பாவேந் தர் பாரதிதாசன்

காதல் அடைதல் உயிரியற்கை-அது கட்டில் அடங்கிடும் தன்மையதோ?