உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மலரும் மஞ்சமும்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 7

என்று பாடினார். காதல் உணர்வு இல்லாதவன்' என்று ஒருவன் தன்னைப்பற்றிக் கூறிக்கொண்டால் அவனை உலகம் ஐயக்கண் கொண்டு பார்க்கிறது" என்றான் அவன்.

பிறகு ஏன் காதலின்பத்தைச் சிற்றின்பம் என்று சிலர் கூறுகின்றனர்?' என்று கேட்டாள் அவள்.

  • அது சுவைப்பவரின் திறமையைப் பொறுத்தது. இதுவே சிலருக்குப் பேரின்பமாகவும் இருக்கலாம். நீ எதிர் பாராத முத்தத்தைச் சுவைத்திருக்கிறாயா?’ என்று கேட் ப. 1ான் அவன். .
  • உங்களிடம்தான் அடிக்கடி சுவைக்கிறேனே!’ என்று கொவ்வை இதழ்களைக் குவித்துச் சொன்னாள் அந்தக் கோல மயில்.

"நான் என் முத்தத்தைச் சொல்லவில்லை; பாவேந்த ரின் எதிர்பாராத முத்தத்தை'ச் சொன்னேன். அக்காப் பியத் தலைவி பூங்கோதை தன் காதலனுக்கு எழுதிய கடி தத்தில்

அத்தான் என்ஆவி உங்கள்

அடைக்கலம்! நீர்ம றந்தால் செத்தேன்! இஃதுண்மை. இந்தச்

செகத்தினில் உம்மை அல்லால் சத்தான பொருளைக் கானேன்!

சாத்திரம் கூறு கின்ற பத்தான திசை பரந்த

பரம்பொருள் உயர்வென் கின்றார்.

அப்பொருள் உயிர்க் குலத்தின்

பேரின்பம் ஆவ தென்று

செப்புவார் பெரியார் யாரும்

தினந்தொறும் கேட்கின் றோமே!