பக்கம்:மலரும் மஞ்சமும்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 9

டச் சிந்தனைக் காரர்களுக்கு இது விளங்காது. ஒரு சங்கக் காதலன் தன் காதலியின் அழகைத் தொண்டியன்ன நின் னலம்" என்று பாராட்டுகிறான். காதலியின் அழகு நுண் பொருள். காதலியின் அழகுக்குப் பருப் பொருளான ஒரு நகரத்தை உவமையாகச் சொல்லியிருப்பது மேலோட்ட மாகப் பார்த்தால் பொருத்தமில்லாமல் படலாம். ஆழ்ந்து ஆராயும்போது இந்த உவமையின் நுட்பம் புலப்படும், தொண்டி நகரின் பெருமிதமான தோற்றமும் திண்ைமயக்க அதன் செழித்த பரப்பும், அந்நகரின் செல்வ வளமும், சேரநாட்டில் அந்நகரின் வாய்த்த தலைமைச் சிறப்பும், அந்நகரின் இதயமான அரண்மனையில் அரசன் விரும்பித் கொலுவிருக்கும் ஆட்சிச் சிறப்பும் அவளுடைய ஆற்றல் மிக்க அழகுக்கு ஒப்பிடப்படுகின்றன என்பதை உணரும் போது அந்த உவமையின் ஆழத்தையும் பரப்பையும் நம் மால் உணர முடிகிறது' என்று விளக்கினான் அவன்.

'உண்மைதான், ஆங்கிலத் தாளிகையான இல்லஸ்ட் ரேடெட் வீக்லி ஆஃப் இண்டியா வடநாட்டு இசைக்குயில் லதாவைப் பாராட்டி, ஒரு சிறப்பு மலர் வெளியிட்டிருந்தது அவ்விதழின் முகப்பில் அவள் படத்தைப் போட்டுக் கீழே Moon light in her throat grow my stopäu?q95531. Qaflu ஒலிக்குக் குளிர்ந்த நிலவொளியை உவமையாக கூறி யிருந்தது எனக்கு அப்போது பொருத்தமில்லாமல்பட்டது. இப்போது அந்த உவமையை வியந்து பாராட்டுகிறேன்’ என்று சிந்தனையோடு பேசினாள் அச் சோலையாழ்.

“இதுபோன்ற நுட்பமான உவமைகளை இன்று புதுப் பாடல் (Modern poems) எழுதும் பலர் கையாளுகிறார் கள்' என்றான் அவன்.

'அது சரி மலரைக் காதலோடு ஒப்பிடுகிறாரே வள்ளுவர். மலரைவிட மென்மையான பொருள் உலகில் வேறு எதுவும் இல்லையா?" என்று கேட்டாள் அவள்.