பக்கம்:மலரும் மஞ்சமும்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21

விளக்கம் வியக்கத் தக்கதாக இருக்கிறது. இந்த உவமை விளக்கம் செவ்வி' என்ற சொல்லின் முழுமையை முப்பரிமாணத்தோடு நம் உள்ளத்தில் படம் பிடித்துக் காட்டிவிட்டது. காதலிப்பவரின் உள்ளம் சிறிதும் புண் படாத வகையில், காதலை நுகரும் நயத்தக்க நாகரிகமே செவ்வி' என்பதைக் காலிங்கர் எவ்வளவு நுட்பமாக விளக்குகிறார்! சரியான இலக்கைக் காலிங்கர் குறி தவறா மல் அடித்து விட்டார். என்றாலும் இவ்வளவு நாகரிக மான காதலன்-காதலியை நாம் எங்கு போய்த் தேடுவது? கழகக் காலக் காதலன் கூடப் பரத்தை...' என்று இழுத்து மீட்டினாள் அவள்.

"பொறு. பரத்தைமை சங்க கால வாழ்வின் ஒர் அங்கம்; ஆனால் பரத்தமையே வாழ்க்கை அன்று. கழகக் காதலர்களில் "செவ்வி உணர்த்து தலைப்பட்டார் சிலரி உண்டு' என்று கூறி, இசைஞன் பாடுவதற்கு முன் இசை கூட்டுவது போல, அவன் நெற்றியைச் சுருக்கி நினைவைக் கூட்டினான்.

"எங்கே? அத்தகைய காதலன் ஒருவனை இலக்கியத்தில் காட்டுங்கள் பார்க்கலாம்?' என்று கூறிச் சிரிப்பு மணியடித் தாள் அச் சேயிழை.

"ஏன் இல்லாமல்? அத்தகைய மென்மையான ஒரு காதலனைப் பாவை பாடிய பேருங்கடுங்கோ, பாட்டுப் பல்லக்கில் ஏற்றிக் கொண்டு வந்து நிறுத்துகிறான். பொருள் தேடுவதற்காக அத்தலைவன் தலைவியைப் பிரிய உள்ளத் தில் நினைக்கிறான். தன் நோக்கத்தைத் தலைவியிடம் அவன் வெளிப்படுத்தவில்லை. என்றாலும் அவன் பிரியப் போகிறான் என்பதை-அவன் உள்ளத்து உணர்வோட் டத்தை-அவள் உய்த்துணர்கிறாள்.'

",அது எப்படி முடியும்? அவள் உள்ளத்தில் ஒடும் உணர்வை அவளால் எப்படி அறிய முடிந்தது?"