பக்கம்:மலரும் மஞ்சமும்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

密多

அதுதான் உயர்ந்த காதலின் தன்மை. அவர்கள் உடலால் இருவரானாலும் உயிரால், உள்ளத்தால் ஒருவரே. இந்த துட்பத்தை உணர்ந்து தான் மற்றொரு கழகப் புலவன் "இருதலைப் புள்ளின் ஒருயிர்’ என்றான்.

  • என்ன?. என்ன?"

"இரண்டு தலையும் ஒரே உயிரும் உள்ள பறவையாம் உண்மைக் காதல்!”

    • x:لڈنرل، تابوے ، •

தன் தலைவன் பிரியப் போகிறான் என்பதை உய்த் துணர்ந்த அவள் ஒரு துன்ப ஓவியமாய் நிற்கிறாள். கண் னில் நீர் நிறைந்து அவள் பார்வை நடுங்குகிறது. துன்பச் சுமையின் வெளிப்பாடாக, நெருப்புப் பெருமூச்சொன்று அவள் நெஞ்சத் துருத்தியிலிருந்து கிளம்பி மூக்கில் வெளிப் படுகிறது. அப்பெருமூச்சு அவள் மார்பில் அணைந்திருந்த குழந்தையின் மடிமீது படுகிறது. அப்பெருமூச்சின் வெப்பம் தாங்காமல் அக்குழந்தையின் தலையிலிருந்த செங்கழுநீர்ப் பூ வாடி உருக்குலைகிறது. இதைப் பார்த்த தலைவன், தலைவியின் ஆற்றாமையுணர்வைப் புரிந்து கொண்டு. தன் பயணத்தைக் கைவிடுகிறான். எப்படி இந்த ஊமை

நாடகம்' என்று கேட்டான் அவன்.

ஆகா! இவனல்லவா காதலள். நீங்களும் இருக்கிறீர் களே? நீங்கள் சில நாட்களில் உள்ளத்தையும் புண்ணாக்கு கிறீர்கள்! உடம்பையும்......! என்றாள் அவள். -

சரி சரி பாட்டைக் கேள்' என்றான் அவன். பரல்முரம் பாகிய பயமில் கானம் இறப்ப எண்ணுதிர் ஆயின் அறத்தா(று) அன்றென மொழிந்த தொன்றுபடு கிளவி அன்ன வாக என்னுநள் போல முன்னம் காட்டி முகத்தின் உரையா