பக்கம்:மலரும் மஞ்சமும்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. மென்தோள் துயில்

"வாணியம்பாடியில் மூன்று புகைவண்டிகள் மோதிக் 'கொண்டன! இறந்தவர் எண்ணிக்கை இருபத்திரண்டாக உயர்த்திருக்கின்றது.’’ என்று வானொலி அழுதது.

இது போன்ற விபத்து விளம்பரங்கள் வானொலியில் வாாம் இரண்டு முறை வழக்கமாக ஒலிபரப்பாவதை அடிக் கடி கேட்டு 'த் சொ’ என்று சப்புக் கொட்டுவது அவள் வழக்கம். ஆனால் இன்று அவள் சப்புக் கொட்டவில்லை தனது சந்தன மேனியில் தீப்பற்றியது போல் அலறினாள் ஏனென்றால் அவள் கணவனும் சென்னை சென்றிருந்தான்.

அந்த நாள் இரவு 10 மணி பத்து நாள் நிலவு, முகில் முக்காட்டுகள் தொங்கிக் கொண்டிருந்தது. அவன் தெருக் கதவின் மீது கை வைத்தான். திறந்தேன்' என்ற சொல் கேட்டது, மூன்று செயல்கள் ஒரே நொடியில் நிகழ்ந்தன!

அவள் விடை:

கதவு திறத்தல்:

ஒருவர் உடம்பில் ஒருவர் ஒடுங்குதல்!

உடம்பெல்லாம் கரும்பு போல் இனிக்கும் கட்டுண்ட சில கணங்கள்! மறக்க முடியாத சில மணித்துளிகள்!

  • உணவு பட்ைக்கட்டுமா? என்று கேட்டாள் அவள்,

"உணவைப் படைக்க வேண்டாம்; பரிமாறு' என்றான்

அவன். சிறிது நேரம் நெற்றியைச் சுருக்கி நின்ற அவள், இரண்டுக்கும் என்ன வேறுபாடு' என்று கேட்டாள்.