பக்கம்:மலரும் மஞ்சமும்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2份

அவ்வாறு எழுதத் தூண்டியிருக்கிறது; மேலும் அவர் ஒரு துறவி' என்றான் அவன்.

காதலின்பம் தான் உலகில் உயர்ந்தது என்ற கருத்தை, என்னாலும் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடிய வில்லை...' என்று கூறி அவன் முகத்தைக் குறிப்பாகப் பார்த்தாள் அவள். .

காதலின்பம் உயர்ந்தது மட்டு மன்று: முழுமையான. ஐம்புலன்களும் ஒன்றித் துய்க்குப் இன்பம்-இதைத் தவிர வேறு எதுவும் இல்லை என்பதை வற்புறுத்த வந்த வள்ளுவர்

கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்

ஒண்டோடி கண்ணே. உள-1101

என்று பாடி விளக்கினார். அதுமட்டுமன்று உலகம் ஒழுங்காக இயங்குவதற்குக் காதலின்பமே அடிப்படை.

கஇன்று மக்களினம் பெற்றிருக்கும் இலக்கியம், கலை அறிவியல் போன்ற துறைகளின் வெற்றிக்கும் , காதலின்பமே அடிப்படை என்பதை அறிவியலின் அடிப்படையில் விளக்கி புள்ளார் சிக்மண்ட் ஃபிராய்டு என்ற மேதை" என்றான் அவன்

  • எப்படி” என்றாள் அவள்.

வாழ்க்கையில் எத்துறையிலும் ஒருவன் வெற்றியடைய விரும்புவதும், புகழ்பெற விரும்புவதும், தான் விரும்பும் பெண்ணின் உள்ளத்தில் இடம் பிடிப்பதற்காகவும் அவளை மகிழ்ச்சியாக வைத்திருப்பதற்காகவும் தான். உலகத்தின் தலை சிறந்த இலக்கியங்கள் யாவும் காதல் இலக்கியங்களே! "நாயக, நாயகி பாவத்தில் பாடும்போதுதான், பக்தி இலக்கியமே படிக்க முடிகிறது: திருப்பாவையையும் கண்ணன் பாட்டையும் ஏன் சுவைக்கிறோம்?

நம் நாட்டுக்கோவில்களில் உள்ள சிற்பங்கள், ஒவியங்கள் நம் நாட்டு நாட்டிய இசை அரங்குகள் ஆகியவற்றைக்