பக்கம்:மலரும் மஞ்சமும்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ 7

கூர்ந்து ஆராயும்போது, காதலுணர்வே அக்கலைகளின் டிப்படை உந்து ஆற்றலாக (Inspiration) விளங்குவதைக் 蠶

ஏன் ! போரில் உயிரைத் துச்சமாக மதிக்கும் வீரத் திற்கும் கூடக் காதல் தான் அடிப்படை.

காற்றி லேறியவ் விண்ணையும் சாடுவோம் காதற் பெண்கள் கடைக்கண் பணியிலே!

என்று பாரதி பாடவில்லையா?" என்றான் அவன்.

போவேந்தர் இன்னும் அழகாகப் பாடுகிறார்.

கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டி விட்டால் மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஒர்கடுகாம் என்று.

என்றாலும் எனக்கோர் ஐயம். தாய்மை உணர்வையும் விடவா காதல் உணர்வு உயர்ந்தது? என்று கேட்டாள் அவள்.

நல்ல கேள்விதான். தாய்மை உணர்வு தற்காலிக மானது. மகனாக இருந்தாலும் மகளாக இருந்தாலும் பருவ மடைந்ததும் பெற்றோரை மறந்துவிட்டுக் காதலிப்பவரிடம் அன்பை மாற்றிக் கொள்கின்றனர். ஏன்! பெற்ற தாயைப் பாரமாக நினைத்து வெறுப்பவரும் உண்டு. அப்போது தாய்மையுணர்வும் வற்றிவிடுகிறது. ஆனால் காதல் உணர்வு நிலையானது' என்றான் அவன்.

முதுமைக் காலத்திலுமா?’ என்று கேட்டாள் அவள். ஆமாம்" என்றான் அவன்

கநீங்கள் கூறும் விளக்கத்தைப் பார்த்தால் ஒரு பெண் தன் குழந்தையை விரும்புவது கூட, அக்குழந்தை தன் காதற்கணவன் கொடுத்த இன்பப் பரிசு என்ற காரணத்