பக்கம்:மலரும் மஞ்சமும்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

பிணம் ஆகிறான். இக்கதையைப் படிப்பவர்களுக்கு அவன் சாவு பெரிய புதிராகத் தோன்றும். ஆனால் கூர்ந்து சிந்திக் கும்போது அவர்கள் வெறுப்புகளையும், போராட்டங்கன்ள யும் மீறிக் காதலுணர்வு அவர்களைப் பிணித்துக் கொண் டிருந்தது என்பது புலப்படும்!’ என்றான் அவன்.

  • வள்ளுவர் காமத்துப்பாலை ஏன் இவ்வளவு சிறப் பாகப்பாடி வைத்திருக்கிறார் என்ற உண்மை இன்றுதான் எனக்குத் தெளிவாகி இருக்கிறது. வரம்புக்கு உட்பட்ட காதலுணர்வுதான் மக்கள் வாழ்க்கையின் அடைப்படை’’ என்றாள் அவள்.

- அக்காதல் உணர்வுக்கு ஊற்றாக, விளங்குபவர் பெண்கள். அவர்களிடத்தில் இயல்பாக அமைந்திருக்கும் கவர்ச்சி, காதலை நெறிப்படுத்தி, ஆடவனையும் நல்வழியில் இட்டுச் செல்லப் பெரிதும் துணை புரிகிறது. ஆகையினால் தான், அமெரிக்கச் சொல்லேருழவன். இங்கர்சாக், பேரின்பம் மிக்க வீட்டுலகத்தில் ஆடவர்களோடு வாழ்வதை விடத்துன்பம் மலிந்த இவ்வுலகத்தில் பெண்ணோடு வாழ்வதையே நான் பெரிதும் விரும்புகிறேன். என்று சொன்னான்’ என்று பெண்மையைப் பாராட்டிப் பேசினான் அவன்.

அவன் பாராட்டு மழையில் குளித்தெழுந்த அவள் போதும்! இன்று அதிகமாகப் பேசி விட்டீர்கள்!' என்று கூறித் தன் தேனடை இதழ்களால் அவன் பேச்சை அடைத்தாள்.