பக்கம்:மலரும் மஞ்சமும்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. புன்னகை அரும்புகள்!

அவனையும் அறியாமல் அன்று அவனுக்கோர் புத்துணர்ச்சி! மண்ணில் நடப்பது கூட வானில் மிதப்பதுபோல் இருந்தது. பூத்துக் குலுங்கிய பவளமல்விகைச்செடி அன்று புதுமணப் பெண்ணாகக் காட்சியளித்தது. புதுமணத் தென்றல் அவன் மேனியில் படர்ந்து புல்லரிப்பை உண்டாக்கியது. பவளப் பாலத்தின் நடுவே உருண்டோடும்

மாலைக் கதிரவனும், காதலனைக் காணாமல் ஏங்கிக் கூம்பிய முகத்தோடு காட்சியளிக்கும் காரிகைபோலச் சேர்ந்து நிற்கும் தூங்குமூஞ்சி மரமும், விளம்பரத்தை விரும்பாமல் வெட்கத்தோடுமரச்செறிவில் மறைந்திருந்து கூவும் மாங்குயிலும், - பகலும் இரவும் காதல் உணர்வோடு