பக்கம்:மலரும் மஞ்சமும்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ꭶ 8

அடிக்கடி திரும்பிப் பார்த்தான். ஏன் தெரியுமா?

அவள் பார்வை அவனைத் துரத்திக் கொண்டு வருவதுபோன்ற உணர்வு: விளையாட்டிலும் அவன் உள்ளம் ஈடுபடவில்லை.

அன்று பந்தாட்டத்தில் தோல்வி மேல் தோல்வி! எதிரணியிலிருந்து புறப்பட்டு வந்த பந்து அவன் தோளைத் தாக்கியது. அப் பந்தின் தாக்குதல்

ஒரு மின்னதிர்ச்சியாய் அவன் உடலெங்கும் பாய்ந்தது.

உடனே

விளையாட்டை நிறுத்திவிட்டு வீட்டை நோக்கி வேகமாக நடந்தான். வீட்டுக் கதவை விரலால் தட்டினான். மெருகு குலையாத பிஞ்சு வெண்டை விரல்கள் கதவை மெதுவாகத் திறந்தன. கயலெழுதி வில்லெழுதிக்

காரெழுதிக் காமன் செயலெழுதித் தீர்ந்தமுகத் திங்களொன்று எட்டிப்பார்த்தது. அம்முகத்தில் ஒரு புன்னகை! கண்ணில் ஒரு வினாக் குறி? காலைக் கதிரவனின் புதிய ஒளிக் கற்றைகள் பூமியின் முகத்தில் படும்போதும் ஏற்படும், ஒளிக்