இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
器4
கோலம் அவள் முகத்தில் விளையாடியது. ஏன்? இன்று வழக்கத்திற்கு முன்னதாகவே திரும்பிவிட்டீர்கன்?’ என்று கேட்பது போலிருந்தது
அவள் பார்வை. அவள் கேள்வியைப் புரிந்து கொண்டான். அதற்கு விடை பாட்டாகவே அவன் வாயிலிருந்து வெளிப்பட்டது. *தாழ்குழலே! அந்தப் பந்து-கைக்குத் தப்பி என் தோளினைத் தாக்கி வீழ்ந்தது: வங்ததுன் இன்ப மேனி நினைவு...... பந்தின் குறும்பும், பாட்டின் குறும்பும் புரித்து கொண்ட அவள், குறும்புப் புன்னகை ஒன்றைக் கன்னமேட்டில் படரவிட்டாள். இன்று அவள் பேசவில்லை. அலை அலையாக அவள் அரக்காம்பல் இதழ்க் கடையில், கன்னப்பரப்பில், புன்னகை மின்னல்கள், விளையாடிக் கொண்டிருந்தன அவன் அவளைப் பார்த்துக் கேட்டான்: "என்ன? இன்று புன்னகையாலேயே பேசிக்கொண்டிருக் கிறாய்" என்று. மீண்டும் அவள் இதழிடுக்கில் ஒரு புன்னகைக் கீற்று பளிச்சிட்டது.
- பந்துட்டதோள்-பாரதிதாசன் கவிதை தொகுதி 11