பக்கம்:மலரும் மஞ்சமும்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

பின் இராமனின் பெருமித நடையைப் பார்த்து முறுவல் பூத்தாள். இராமன் நடைக்குக் களிற்றின் நடை தோற்று விட்டது” என்பது சீதையின் புன்னகைக்குப் பொருள்,

  • ஒதிமம் ஒதுங்கக் கண்ட

உத்தமன் உழையள் ஆகும்

சீதை தன் நடையை நோக்கிச்

சிறியதோர் முறுவல் செய்தான்.

மாதவள் தானும் ஆண்டு

வந்துநீர் உண்டு மீளும்

போதகம் நடப்பு நோக்கிப்

புதியதோர் முறுவல் பூத்தாள்.

இப்பாட்டைக் கேட்டதும் அவள் மீண்டும் புன்னகைத் தாள். அவள் கண்கள் விரித்துவைத்த கவிதை ஏடுகளைப் போல் ஆயிரம் உணர்வுகளை வெளிப்படுத்திக் கொண்டி ருந்தன. அவள் கன்னப்பளிங்கு ஒவச் செய்திகளை உணர்த் திக் கொண்டிருந்தது.

அவன் சொன்னான் :

"புன்னகைகள், ஆழ நெஞ்சத்தில் அனைபோட்ட கருத்துகளையும், முகத்தில் அரங்கேற்றம் செய்யும் ஆற்றல் பெற்றவை. •

'கண்ணகி ஒரு கரும்புயாழ். அவள் இன்னிசை நரம்புகள் கோவலன் விரல்களால் சுண்டி எழுப்பப்பட்டுப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. நிலா முற்றத்து நினைவு களை அசைபோட்டு அசைபோட்டு அவள் நெஞ்சிப் பற்கள் ஒய்ந்து விட்டன. கனவு கூட அவளுக்குப் பேய்த் தேர் போலக் கலங்கலாகவே காட்சியளித்தது. பெரு மூச்சையே உயிர் மூச்சாக்கி அவள் வாழ்ந்து கொண்டிருந்தாள்.

  • ஆரணிய காண்டம்-கம்ப ராமாயணம்