பக்கம்:மலரும் மஞ்சமும்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37

புகை ஓவியமாகக் காட்சியளித்த கண்ணகியைக் கோவலன் பெற்றோர் ஈர விழிகளால் எதிர் நின்று பார்த் தனர். அவள் பொறுமை அவர்கள் உள்ளத்தில் புல்லரிப்பை உண்டாக்கியது. அவள் பண்பு நலத்தைப் பலபடப் பாராட்டினர்.

"கணவனைப் பிரிந்திருக்கும் தனது வருத்தம் அவர் களுக்குத் தெரியக்கூடாது என்பதற்காக மலர்ச்சியை வேண்டுமென்றே முகத்தில் வரவழைத்துக்கொண்டு புன்ன கைச் செய்தாள் அவள். எதை அவள் மறைக்க முயன் றாளோ, அதை வெட்ட வெளிச்சமாகக் காட்டிக் கொடுத்துவிட்டது அப்போலிப் புன்னகை அப்புன்னகைக் குப் பின்னே ஒளிந்து கொண்டிருந்த துயரக் கடலின் ஆழத்தை அளந்தறிய முடியாமல் ஆறாத்துயரில் அழுந் தினர் கோவலன் பெற்றோர்.

'யான் அகத்தொளித்த -

நோயும் துன்பமும் நொடிவது போலுமென் வாயல் முறுவற்கு அவர் உள்ளகம் வருந்த

என்று கொலைக்களக் காதையில் கோவலனிடம் கூறினாள் கண்ணகி'-என்றான் அவன்.

அதற்கும் அவள் மறுமொழி ஏதும் கூறவில்லை. மீண்டும் புதிய புன்னகை ஒன்றை வீசினாள். அந்தப் புன்னகை வீச்சின் மயக்கத்தில் அவன் நிலை குலைந்து போனான்.

அவன் மீண்டும் சொன்னான் :

கட்டழகியின் கள்ளப் புன்னகையில் கட்டாரி ஒளிந்து கொண்டிருக்கிறது' என்று மேலை நாட்டுப் புலவன்ஒருவன் சொன்னான். அதை நீ இன்று உண்மையென்று காட்டு கிறாய்,