பக்கம்:மலரும் மஞ்சமும்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

பக்கத்தில் கவனிப்பாரற்றுக் கிடந்தது. வெப்பக் கொடுமைக்கு ஆற்றாமல் பவளத் திட்டுகள் போல் அவள் மார்பில் படர்ந்த தடிப்புகள்! அதில் கொப்புளங்கள்t முன்தானை விசிறியால் விசிறிக்கொண்டு மொட்டை மாடியில் படுத்தவண்ணம் வானத்தைக் கண் கொட்டாது பார்த்துக் கொண்டிருந்தாள் அவள். காதலர் அருகில் இருக்கும்போது குளிர்ச்சி யைக்கொட்டும் r

இந்தப் பாழும் நிலவு ஏன்தான் இப்போது கொதிக்கிறதோ? என்று சலித்துக் கொண்டாள். ..இப்பாழும் நிலவுஎன்னை மட்டுமா சுடுகிறது? இந்த வானத்தையும் அல்லவா சுடுகிறது! இது அள்ளித் தெளிக்கும் நெருப்பால் என் மார்பில் மட்டுமா கொப்புளங்கள்! இந்த வானப் பெண்ணின் மார்பிலும் அன்றோ விண்மீன் கொப்புளங்கள்!

இந்தச் சுடு நிலா என்னை மட்டுமா படுத்துக்கிறது? அந்தத் தமயந்தியை

என்னபாடு படுத்தியது? இதன் கொடுமைக்கு ஆற்றாத தமயந்தி செப்பிளங் கொங்கைமீர்! திங்கள் சுடர்பட்டுக் கொப்புளம் கொண்ட குளிர்வானை-இப்பொழுதும் மீன்பொதிந்த வானம் எனச்சொல்வ தென்கொலோ