பக்கம்:மலரும் மஞ்சமும்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43

தேன்பொதிந்த வாயால் தெரிந்து-என்று வசைபாடித் துாற்றினாளே! அது பொருத் தந்தான்!”

என்று கூறினாள் அவள்.

என் கணவர் என்னை ஒரேயடியாகப் பிரிந்தா சென்று விட்டார்? இல்லை! கோடை வகுப்பு (Summer course)க்குக் கோவை சென்று ஒரு திங்கள் ஆகிறது. அதற்குள் ஊருக்குள் ஒர் அலர், கிசு கிசு! என் கணவரி என்னைக் கைவிட்டு விட்டு எங்கேயோ ஒடிப்போனது போல்!

அடுத்த வீட்டு அலர்மேலுவும், கோடிவீட்டுக் கோமளமும் காலையில் பார்த்த சூட்டுக்கோல் பார்வை என்னை நிலைகுலையச் செய்துவிட்டது. மரத்தடியில் தனியாகக் கிடந்த ஒர் அத்திப் பழத்தை ஏழு நண்டுகள் ஏறி மிதித்ததாக ஒரு கற்பனை!

அந்த அத்திப் பழம்போல் அவர்கள் பார்வை பட்டு நானும் நைந்து போனேன்'

என்று கூறிப் பெருமூச்சு விட்டாள் அவள். மாடிப் படியில் யாரோ ஏறிவரும் ஒசை கேட்டுத் திரும்பினாள் அவள்! அவன்தான்! ஆம்! அவனே தான்! தண்டவாளத்தில் பாய்ந்துவரும் கோவை விரைவு வண்டியைப் போல்