உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மலரும் மஞ்சமும்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4委

அவளை நோக்கிப் பாய்ந்து வந்தான் அவன். * நில்லுங்கள்!' என்றாள் அவள். அவன் நின்றான்! கண்களால் அவளை அளந்தான் ! அவள் மூன்று விரலைக் காட்டினாள். *உண்ணா நோன்பா?’ என்று சலிப்போடு கேட்டான் அவன். அவள் குறும்புப் புன்னகையோடு தலையசைத் தாள்: ஒடுகின்ற புகைவண்டியிலிருந்து கழற்றிவிடப்பட்ட தனிப் பெட்டிபோல் வேகம் குறைந்து போனான் அவன். அவள் சொன்னாள் : உங்கள் நிலைக்காக நான் மிக வருந்துகிறேன். o கடந்த ஒரு திங்களாக என் அழகுப் பால் கன்றும் உண்ணாமல் கலத்திலும் விழாமல் நிலத்திலே சிந்தி வீணாயிற்று! என் நினைவே உங்களுக்கு அற்றுப் போய்விட்டது!’ என்று கூறித் தேம்பினாள் அவள். அவளது குறுந் தொகைக் கற்பனையைக் கேட்டதும், அவன் இலக்கிய உள்ளம் விழித்துக் கொண்டது. அவன் சொன்னான் : o கன்று முண்ணாது கலத்தினும் படாது நல்லான் தீம்பால் நிலத்துக் காங்கு எனக்கம் ஆகாது என்னைக்கும்

t. ఫీవీ `? உதவாது திதலை அல்குவென் மாமைக் கவினே! -குறுந்தொகை 27