பக்கம்:மலரும் மஞ்சமும்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45

  • ஆருயிரே !

சென்ற கிழமை கோவையில் எங்கள் இலக்கியப் பேராசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது -eyðistsvš sastagsir sgorgir – sir (John Donne) என்பானுடைய ஒரு காதற் கற்பனையை விளக்கினார். நான் அசத்து போய்விட்டேன். * அக்கவிஞன் தன் காதலியைப் பிரிந்து அயல் நாடு செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. அங்கிருந்து தன் காதலிக்குக் கவிதையிலே ஒரு கடிதம் எழுதுகிறான். அதில் தன்னையும் தன் காதலியையும் saturiruu (Compass) šßer இரண்டு முட்களுக்கு ஒப்பிடுகிறான். வட்டமிடும் போது நடுவிலே ஊன்றி நிலையாக நிற்கும் முள்ளுக்குக் காதலியையும் சுற்றிவரும் முள்ளுக்குத் தன்னையும் ஒப்பிடுகிறான். சுற்றிவரும் முள் எப்படிச் சுற்றினாலும் நடு முள்ளைத்தானே சுற்றிச் சுற்றி வருகிறது. சுற்றிவரும் முள் தொலைவில் சென்றால். நடுமுள் அதை நோக்கிக் குனிகிறது: நெருங்கிவந்து தன்னை அடையு போது மகிழ்ச்சியோடு நிமிர்ந்து நிற்கிறது.

  • And though it in centre sit Yet when the other far doth roam It leans, and hearkens after it, And grows erect, as that comes home.

A Valediction – John Donne