இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
46
அதைப் போலத் தான் நானும் ! நான் எங்கிருந்தாலும்:
என் நினைவுகள் உன்னைச் சுற்றியே வட்டமிடுகின்றன: உன் நினைவுகளையே நானும் தொலைவிலிருந்து பகிர்ந்து கொள்கிறேன் எங்குச் சுற்றினாலும்
என் இறுதிக் குறிக்கோள் நீ தானே ! " என்றான் அவன். 寂
இந்த வக்கனைப் பேச்சுக்குக் குறைவில்லை’ என்று கூறினாள் அவள். "என்ன செய்வது?
எடுத்துக் கொண்டபணி முற்றுப் பெற வேண்டாமா? இன்னும் ஒன்றரைத் திங்கள் நான் கோவையில் உன்னைப் பிரிந்து... என்று அவன் கூறி முடிக்குமுன், 'நிறுத்துங்கள்?' என்று கூச்சலிட்டாள் அவள். அருகிலே கிடந்த திருக்குறளை எடுத்துப் பரபரப்பாகப் புரட்டினாள் * இந்தக் குறளைப் படியுங்கள் !" என்று அவனிடம் நீட்டிவிட்டு அம்புபோல் அங்கிருந்து பறந்து சென்றாள். குறளைப் படித்தான்: செல்லாமை உண்டேல் எனக்குரை; மற்றுநின் வல்வரவு வாழ்வார்க்கு உரை , 11 51