பக்கம்:மலரும் மஞ்சமும்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

'மதுவிலக்கைத் தளர்த்துவதும் இறுக்குவதும் எனக்கு ஒன்றுதான்; போதையில்லாமல் ஒரு நாள் கூட நான் இருந்ததில்லை' என்றால் அவள்.

அலர்மேலு அவளை வியப்போடு நிமிர்ந்து பார்த்து என்னடி உளறுகிறாய்?" என்று கேட்டாள்.

‘உளறவில்லை; உண்மையைத் தான் சொல்லுகிறேன். கள் உண்டால்தான் போதைத்தரும்; ஆனால் கண்டாலே போதை தரும் பொருளைக் கைப்புறத்திலேயே நான் வைத் திருக்கின்றேன்' என்று குறுஞ்சிரிப்புடன் சொன்னாள் அவள்.

அது என்ன பொருள்?' என்று ஆவலோடு கேட்டாள்" அன்புத் தோழி.

"அதுவா? கட்டி அணைக்கும் காதற் பொருள்' என்று கொட்டிச் சிரித்தாள் அவள். *

  • சுரைக் கொடி கூரையெல்லாம் 'படர்ந்தாலும் வேர் நிலத்தில் தான் இருக்கும். அது போல நீ எதைப்பற்றி பேசினாலும் உன் பேச்சின் வேர் எப்போதும் காதல்தான்' என்றாள் அலர்மேலு.

கள்ளுக்கும் காதலுக்கும் ஒரு பொதுப் பண்புண்டு, கள், கொஞ்சம் குடித்ததும் மேலும் மேலும் குடிக்கத் தூண்டும்; காதலும் அப்படித்தான். சுவைத்தவர் காதலை மறப்பதுண்டோ? இ ல் லா வி ட் டா ல் பாவேந்தர் பாரதிதாசன்,

அன்றன்று புதுமையடி சலிப்பதுண்டோ ஆரணங்கே! நீ கொடுக்கும் இன்பம் ?

என்று மெய்ம்மறந்து பாடியிருப்பாரா?' என்றாள் அவள்,

"ஆமாம், கள்ளைப்பற்றி இவ்வளவு தெளிவாகப் பேச கிறாயே! அதனை அருத்தியிருக்கிறாயா நீ எனக்கென்