பக்கம்:மலரும் மஞ்சமும்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 1

"ஆமாம்! ஊரில் இல்லை. அலர்மேலு! ஆண்களுக்கும் பெண்களுக்கும் அடிப்படையிலேயே ஒரு வேறுபாடு. ஒர் ஆடவன் வீட்டை விட்டு வெளியில் சென்றதும் தன்னைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பான்; வீட்டை மறந்து விடுவான். பெண் அப்படியில்லை; அவள் தன்னை மறந்து விட்டு, வெளியில் சென்ற ஆடவனையே நினைத்துக்கொண் டிருப்பாள். இந்த ஆடவர்களே போனால் போன இடம்? வந்தால் வந்த இடம்! இரண்டு நாளில் வருகிறேன்’ என்று சொல்லி விட்டுச் சென்ற என் கணவர் நான்கு நாட்கள் ஆகியும் வரவில்லை யென்றால் பாரேன்: வரட்டும்! இந்த முறை எளிதில் மசியப் போவதில்லை. முகங்கொடுத்துப் பேசுகிறோனா பார்!" என்று ஆத்திரத்தோடு பேசிக் கொண்டிருந்தாள் அவள். -

அப்போது தடதட வென்ற ஒசையோடு புகையைக் கிளப்பிக்கொண்டு அவள் வீட்டின் முன்னால் வண்டி யொன்று வந்து நின்றது. வண்டியிலிருந்து அவன் இறங்கிக் கொண்டிருந்தான். தான் தோழியிடம் கூடச் சொல்லிக் கொள்ளாமல் புள்ளிமானாய் ஒடினாள் அவள். அவன் பெட்டியை எடுத்துக் கொண்டு முன்னால் சென்றான். தன்னைத் தானே தாங்க படியாத அப்பழக்குலை. வண்டியில் இருந்த பழக்கூடையைச் சுமந்து கொண்டு தள்ளாடியவண்ணம் அவன் பின்னால் சென்றது.

வீட்டுக்குள் நுழைந்ததும் அவள் சத்தமிட்டாள்!

"அட விடுங்கன்னா...சட்டை பூரா ஒரே புழு கி...தலை யெல்லாங் கரித்துாள்...அப்பப்பா...இருங்க சிக்கிரம் வெந்நீர் வைச்சுதர்ர... என்று கூறிய வண்ணம் நழுவி மீனாக ஒடி னாள் அவள்.

மெருகு குலையாமல் செடியினின்றும் புதிதாய்ப் பறித்தெடுத்த