இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
52
நாட்டு வெண்டைப் பிஞ்சைப் பல்சக்கரம் போல் வட்ட வட்டமாக வெட்டிப்போட்டுச் சுவையாக சுவைக்கும் மோர்க்குழம்பு அவனுக்குப் பிடிக்கும்!
காம்பு பெருத்துப் புல்லிதழ் முழுமையாகப் பிரியாமல் பூம்பிஞ்சாக எட்டிப் பார்க்கும் கத்தரியை எண்ணெயில் போட்டுத் துவட்டி . எடுத்து வைத்த பொரியல் அவனுக்குப் பிடிக்கும். கொத்தாக ஒடித்துப் போட்ட கறிவேப்பிலை மிதக்கக் காரமாக வைக்கும் மிளகுச் சாறு அவனுக்குப் பிடிக்கும். இவை எல்லாவற்றையும் விட, அவள் மேனியான எட்டுச் சாண் தங்கத்தை எடை போட்டுப் பார்த்துஅவன் அமுதுாறும் இதழ்களை அசை போட்டு - தெவிட்டாத இன்டத் தேன்மலரில் படிந்து இரவை விரட்டுகின்ற இன்பவிளையாட்டு அவனுக்கு மெத்தப் பிடிக்கும்! அன்று மணித்துளிகளை அவர்கள் இன்பத் துளியாக மாற்றிக் கொண்டிருந்தனர். கோழி கூவும் ஒனச கேட்டது!